மத்திய குழு டெல்டா பகுதிகளில் 4வது நாளாக ஆய்வு - நெல்லின் ஈரப்பதத்தை 22% அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்டா பகுதிகளில் 4வது நாளாக இன்று ஆய்வு செய்து வரும் மத்திய குழுவிடம், நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களை சரியாக கையாளாததால் நெல்கொள்முதலில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. குறிப்பாக சாக்கு பற்றாக்குறை, சணல் பற்றாக்குறை, தேவையான கிடங்கு வசதியின்மை, கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் அரவை ஆலைகளுக்கும், கிடங்குகளுக்கும் அனுப்பாமல் தேங்கி கிடந்தன. இதனால் பல லட்சகணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. நெல் கொள்முதல் செய்யப்படாததால் மழையில் நனைந்து பாதிக்கப்பட்ட நெற்பயிர்களின் ஈரபதத்தை 22 சதவீதமாக அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கடந்த 3 தினங்களாக ஆய்வு செய்து வருகின்றனர். 4வது நாளான இன்று திருவாரூர் மாவட்டததில் திருவாரூர் கோயில்வெண்ணி, ஊர்குடி, கொட்டாரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர். மத்திய குழுவில் இடம்பெற்ற 5 பேர் கொண்ட குழுவினர் நெல்லை ஆய்வு செய்து நெல்மாதிரிகளை சேகரித்தனர்.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து நெல்லின் ஈரப்பதம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். கடலூர் மாவட்டம், கலையூர், தூக்கணம்பாக்கம், குண்டியமல்லூர் ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விவசாயிகளின் குறைகளை கேட்டு அறிந்த அதிகாரிகள், அந்த பகுதிகளில் எந்தளவு ஈரப்பதம் உள்ளது என்பதை கணக்கிட்டு சோதனைக்காக நெல்லை எடுத்துச் சென்றனர்.

Night
Day